(எம்.எம்.சில்வெஸ்டர்)

19 வயதுக்குபட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் 19 வயதுக்குட்பட்ட இந்திய அணி 6 ஆவது தடவையாக சம்பியன் கிண்ணத்தை வென்றது.

ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் - பரபரப்பான ஆட்டத்தில் 5 ரன்கள் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தியது இந்தியா

கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் 19 வயதுக்குட்பட்ட இந்திய அணி 5 ஓட்டங்களால் இறுக்கமான வெற்றியை ஈட்டியது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட இந்திய அணி 32.4 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 106 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. 

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட பங்களாதேஷ் அணி 33 ஓவர்களில் 102 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களை இழந்து 5 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது.