ஜெயம் ரவி நடிப்பில் தயாராகிவரும் ‘ஜன கன மன’ என்ற திரைப்படம் ரீமேக் படம் இல்லை என இயக்குனர் அகமது விளக்கமளித்துள்ளார்.

Image result for jeyam ravi

இதுதொடர்பாக இயக்குநர் அஹமது பேசுகையில்,‘ ஜெயம் ரவி, டாப்ஸி நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் ‘ஜன கன மன’. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது அசர்பைஜான் நாட்டில் நடைபெற்று வருகிறது.

இந்தப்படத்திற்காக படமாக்கப்பட்ட காட்சிகளை பார்த்து, இந்தியில் அக்ஷய்குமார் நடிப்பில் வெளியான ‘பேபி ’படத்தின் ரீமேக்தான் ‘ஜன கன மன’ என்று செய்திகள் வெளியாகின. 

ஆனால் அது தவறு. இந்தப் படம், ஹிந்தி படமான ‘பேபி ’படத்தின் ரீமேக் இல்லை. முழுக்க முழுக்க எக்சன் என்டர்டெய்னர் பாணியிலான புதுமையான திரைக்கதை. பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாராகும் ஸ்பை திரில்லர் ஜேனர் வகையை சேர்ந்த திரைப்படம் இது.” என விளக்கமளித்தார்.

ஜெயம் ரவி, டாப்ஸி, டயானா எரப்பா, அர்ஜுன், ரகுமான், எம்எஸ் பாஸ்கர், ஈரானிய நடிகை எல்நாஸ் நவுரோஜி, ‘கே.ஜி.எஃப்’ பட புகழ் ராமச்சந்திர ராஜு உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.