எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் சிரேஷ்ட புதல்வரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவின் திருமணத்தில் கிளிநொச்சியை சேர்ந்த அரசியல் கைதியும் அவரது மனைவியும்  பங்கேற்றுயுள்ளார்கள்.

பிணையில் வெளியில் வந்துள்ள அரசியல் கைதியான கிளிநொச்சியில் உள்ள சவரிமுத்து லோகநாதன் என்பவரே இவ்வாறு திருமணத்தில் பங்கேற்றுயுள்ளார்.

அவர்களை திருமணத்திற்கு அழைத்து வருவதற்கு பிரத்தியேக வாகனம் ஒன்றும் கிளிநொச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச சிறையில் இருந்த நேரத்தில் குறித்த அரசியல் கைதியின் நட்பு கிடைக்கப்பெற்றுள்ளது.

அதன் பின்னர் சிறையில் இருந்து வெளியில் வந்த நாமல், குறித்த அரசியல் கைதியின் வீட்டிற்கு சென்று பார்வையிட்டதுடன் அவரது குடும்பத்தினருக்கு தனி வீடு ஒன்றையும் அமைத்துக் கொடுத்துள்ளார்.

இந்நிலையிலேயே குறித்த அரசியல் கைதியின் குடும்பத்தினரை தனது திருமணத்திற்கு நாமல் அழைத்து விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.