(ஆர்.விதுஷா)

போரின் போது அங்கவீனமடைந்த படையினருக்கும் பலியானவர்களின் குடும்பத்தினருக்கும் தற்போது வழங்கப்பட்டு  வரும் ஓய்வூதியத்தை விடுத்து முழுமையான சம்பளத்தை பெற்றுத்தருமாறு போரின் போது உயிரிழந்த மற்றும் அங்கவீனமடைந்த இராணுவ வீரர்களின் ஒன்றியம்  வேண்டுகோள் விடுத்திருக்கின்றது.

இது வரையில் முன்வைக்கப்பட்ட அனைத்து கோரிக்கைகளுக்குமான  தீர்வினை அரசாங்கம் தகுந்த  முறையில் பெற்றுத்தந்துள்ளது. ஆகவே , எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பது நல்லதல்ல. ஆயினும் , எமது சம்பளப்  பிரச்சினைக்கான  தீர்வினை அரசாங்கம் கூடிய  விரைவில்  பெற்றுத்தரும்  என நம்புகின்றோம்.  

இருப்பினும் அரசாங்கம் எதிர்வரும் 17 ஆம்  திகதிக்கு முன்னர் தகுந்த    தீர்வைப்பெற்றுத்தராவிடின் தற்போது சிறு குழுக்களாக  போராட்டத்தில ஈடுபடுபவர்களுடன்  இணைந்து பரந்தளவிலான   போராட்டத்தை  முன்னெடுக்க  தயாராகவுள்ளதாகவும்  ஒன்றியத்தினர் குறிப்பட்டனர்.