போயா தினத்தன்று சட்ட விரோதமான முறையில் மஸ்கெலியா நகரில் மது விற்பனையில் ஈடுபட்ட ஒருவரை மஸ்கெலியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த விற்பனை தொடர்பில் பொலிஸ் நிலையத்திற்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலையடுத்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் ¼ அளவுடைய மது போத்தல்கள் கைப்பற்றதோடு சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைது செய்துள்ளனர்.

அத்தோடு அதற்கு அருகாமையில் மது போதையில் இருந்த ஒருவரையும் கைது செய்யப்பட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.