திருமண நிகழ்வில் வழங்கப்பட்ட அன்பளிப்பு பணம் கொள்ளை ; சந்தேக நபர் பிணையில் விடுதலை

Published By: Digital Desk 4

14 Sep, 2019 | 09:14 AM
image

கிளிநொச்சி கனகபுரம் பகுதியில் அமைந்துள்ள நன்பர்கள் விருந்தகத்தில் நடைபெற்ற திருமண நிகழ்வின் போது அன்பளிப்பாக வழங்கப்பட்;ட பணத்தினை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் கடும் நிபந்தனையுடன் கூடிய பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி கனகபுரம் பகுதியில் அமைந்துள்ள நன்பரகள் விருந்தினர் விடுதியில்   கடந்த ஜூன் மாதம் 05ம் திகதி நடைபெற்ற திருமண நிகழ்வு ஒன்றில் அன்பளிப்பாக வழங்கப்பட்ட பெருந்தொகை நிதி கொள்ளையிடப்பட்;டமை தொடர்பில் கடந்த ஜூன் மாதம் 09ம் திகதி  கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில்  முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.

இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்த கிளிநொச்சிப் பொலிசார் விடுதியில் பொருத்தப்பட்ட சீ.சீ.ரீ, வி கமரா பதிவுகளை ஜூன் மாதம் 28ம் திகதி  பார்வையிட்டு அதனை  அடிப்படையாக வைத்து சந்தேக நபர் ஒருவரை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்ததுடன், மேற்படி சந்தேக நபரை கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதையடுத்து, குறித்த சந்தேக நபர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

மேற்படி சந்தேக நபரை (11-09-2019) அன்று கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதி மன்றில் நீதி மன்ற நீதிவான் ரீ. சரவனராஜா முன்னிலையில் ஆஜர்படுத்தியபோதே இவ்வாறு கடும் நிபந்தனையுடன் கூடிய பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதாவது குறித்த குற்றச்சாட்டுத்  தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபரை சுமார் ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான கிராம அலுவலர் வதிவிடத்தை உறுதிப்படுத்திய தலா ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான இரு ஆட்பிணைகளிலும் இருபத்தி ஐயாயிரம் ரூபா பெறுமதியான காசுப்பிணையிலும் செல்லுமாறும் எதிர்வரும் நவம்பர் மாதம் 13ம் திகதி வழக்கு தவணையிடப்பட்டுள்ளது.

குறித்த திருட்டுச் சம்பவம் தொடர்பில் பொலிசார் சந்தேக நபருக்கு சார்பாகவே செயற்பட்டு வருவதாகவும் இது தொடர்பான விரிவான விசாரணைகளை பொலிசார் முன்னெடுக்க  தவறி வருகின்றனர் என்றும் கடந்த தவணைகளில் முறைப்பாட்டாளர் சார்பாக ஆயரான சட்டத்தரணிகள் குறிப்பிட்டதையடுத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் தொலைபேசி உரையாடல்களின் அடிப்படையில் மேலும் இருவரை கைது செய்யவுள்ளதாக குறிப்பிட்டாலும் குறித்த இரு சந்தேக நபர்களையும் இதுவரை கைது செய்ய எந்தவித நடவடிக்கையும் பொலிசார் எடுக்கவில்லை என்றும் சட்டத்தரணிகள் குறிப்பிட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50