சர்வதேச சுகாதார தொழில்நுட்ப மாநாடு சென்னையில் எதிர்வரும் 27 28 ஆகிய திகதிகளில் நடைபெறுகிறது.

சர்வதேச அளவில் உள்ள மருத்துவ தொழில்நுட்பங்களையும், புதிய நடைமுறைகளையும் பரஸ்பரம் பகிர்ந்து கொள்வதற்காகவும், சர்வதேச தரத்திலான மருத்துவ சிகிச்சைகளை இந்தியாவிலும், தெற்காசியாவிலும் மேம்படுத்தும் வகையிலும் இந்த மாநாடு நடைபெறவிருக்கிறது.

இந்த மாநாட்டில் இந்தியா, இலங்கை மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த 700க்கும் மேற்பட்ட மருத்துவ நிபுணர்கள், சுகாதாரத்துறை பிரதிநிதிகள் பங்குபற்றுகிறார்கள். இந்த மாநாட்டில் நவீன மருத்துவ தொழில்நுட்பம், சுகாதார கட்டமைப்பு வசதிகள், மருத்துவத்துறை மேம்பாடு, வைத்தியசாலை உட்கட்டமைப்பு, நவீன பாணியிலான சத்திரசிகிச்சை கூடங்கள் உள்ளிட்ட தலைப்புகளில் கருத்தரங்குகள் 25 அமர்வுகளாக நடைபெற உள்ளன. இதில் பல்வேறு மருத்துவ நிபுணர்கள் பங்குபற்றி உரையாற்றவிருக்கிறார்கள்.

அத்துடன் சுகாதாரத் துறை சார்ந்த புதிய தொழில் நிறுவனங்களை தொடங்குவதற்கு ஊக்குவிக்கும் பொருட்டு அத்தகைய நிறுவனங்களுக்கு தேவையான நிதி உதவி, தொழில்நுட்ப உதவி உள்ளிட்டவற்றை வழங்குவதற்கான ஏற்பாடுகளும் இம்மாநாட்டில் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்த மாநாடு சென்னை சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்ப கழக ( ஐ ஐ டி)வளாகத்தில் நடைபெறுகிறது.

தொகுப்பு அனுஷா.