(எம்.மனோசித்ரா)

பொது சின்னம் தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டால் பொதுஜன பெரமுன - சுதந்திர கட்சி கூட்டணி தொடர்பான பேச்சு வார்த்தையை வெகுவிரைவில் வெற்றிகரமாக நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

பொதுஜன பெரமுன - சுதந்திர கட்சி கூட்டணியின் சின்னம் தொடர்பில் இருதரப்பிலும் காணப்படும் முரண்பாடுகள் தொடர்பில் குறிப்பிடுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடனான கூட்டணியை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்பதே எம்முடைய எதிர்பார்ப்புமாகும். எனினும் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளரைப் போன்று சின்னமும் முக்கியத்துவம் வகிக்கிறது. 

எனவேதான் பொது சின்னம் ஒன்று தெரிவு செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை நாம் அவர்களிடம் முன்வைத்திருக்கின்றோம்.

எமது கோரிக்கைக்கு அந்த கட்சி இணக்கம் தெரிவித்தால் வெகுவிரைவில் பரந்து பட்ட கூட்டணி தொடர்பில் தீர்க்கமான முடிவொன்றை எடுகக் கூடியதாக இருக்கும் என்று எதிர்பார்க்கின்றோம் என அவர் தெரிவித்தார்.