(எம்.ஆர்.எம்.வஸீம்)

குடும்பத்தில் அடுத்த தலைமுறைக்கு அதிகாரத்தை வழங்கும் முறை ஐக்கிய தேசிய கட்சியில் இல்லை. கட்சிக்குள் அதிகமானவர்களால் விரும்பப்படுபவரையே ஜனாதிபதி வேட்பாளராக நியமிப்போம். அதுதொடர்பில் கலந்துரையாடல் இடம்பெற்று வருவதால்தான் தாமதம் ஏற்பட்டுள்ளது என அமைச்சர் கபீர் ஹாசிம் தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை பெயரிடுவதில் ஏற்பட்டுவரும் காலதாமதம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசிய கட்சியை வெற்றிபெறச்செய்ய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க எத்தகைய அர்ப்பணிப்பையும் மேற்கொள்ள தயாராகவே இருக்கின்றார். நாட்டு மக்களில் அதிகமானவர்கள் கேட்கும் தலைவரை பெற்றுக்கொடுக்க நாங்கள் தயாராக இருக்கின்றோம். 

ஐக்கிய தேசிய கட்சி ஜனநாயக கட்சியாகும். அதனால்தான் வேட்பாளர் தெரிவு தொடர்பில் கருத்து வேறுபாடுகள் இடம்பெறுகின்றன. அதற்காக கட்சிக்குள் பிளவு இருப்பதாக தெரிவிக்க முடியாது என்றும் அவர் கூறினார்.