மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்டொகம் தோட்ட ஸ்காப்ரோ பிரிவில் இன்று பகல் மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டவர் 43 வயதுடைய ராமு மகாலெட்சுமி என்றும் இவருக்கு மூன்று ஆண் குழந்தைகள் இருப்பதாகவும் தெரிவித்ததுடன் இச்சம்பவம் இடம்பெற்ற நேரத்தில் வீட்டில் முதியவர் ஒருவருடன் சிறுவர் ஒருவர் மாத்திரமே இருந்ததாகவும், அவ்வேளையில் இருவரும் சுகவீனம் காரணமாக மாத்திரை அருந்தி இருந்தமையால் நித்திரை கொண்டதால் தூக்கிட்டு கொண்டதை பார்க்கவில்லை என்றும், கணவர் வேலைக்கு சென்றிருந்த நேரத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் பிரேத பரிசோதனைக்காக குறித்த பெண்ணின் சடலம் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.