அம்பலாங்கொடை - கந்தேகொட பகுதியில் இன்று பிற்பகல் பாதுகாப்பற்ற ரயில் கடவையில் பயணித்த வேன் ஒன்றின் மீது ரயில் மோதி விபத்துக்குள்ளானதில் குறித்த வேனில் பயணித்த  தாய் மற்றும் மகன் உயிரிழந்துள்ளதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வேன் மீது ரயில் மோதி விபத்து  - தாய் மற்றும் மகன் பலி

இந்நிலையில் குறித்த  விபத்தில் படுகாயமடைந்த தந்தை மற்றும் மற்றுமொரு மகன் ஆகியோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் அம்பலாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்படத்தக்கது.