(நா.தனுஜா)

நாட்டில் சிறந்ததொரு ஆட்சியை முன்னெடுப்பதாகவும், அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரங்களைத் தவறாகப் பயன்படுத்த மாட்டேன் என்றும் உறுதியளித்து ஆட்சிபீடமேறிய ஒரு ஜனாதிபதியினால் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் பாதுகாப்பு அமைச்சிற்குக் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளமை கண்டனத்திற்குரியது. 

எனவே அந்த விசேட வர்த்தமானி அறிவித்தலை உடனடியாக இரத்துச்செய்யுமாறு ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் கேட்டுக்கொள்வதுடன், சுதந்திரமான தேர்தலை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் சுதந்திர ஊடக அமைப்பு வலியுறுத்தியிருக்கிறது. 

இதுகுறித்து அவர்கள் வெளியிட்டிருக்கும் ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.