மட்டக்களப்பில் இன்று திறந்து வைக்கப்பட்ட தனியார் பஸ் நிலையம்  ஒரு சிறிய மழைக்கே இவ்வாறு வெள்ளத்தில் மிதக்கும் காட்சி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மட்டு நகரில் அமைக்கப்பட்ட தனியார்பஸ் நிலையம் 65மில்லியன் ரூபாயில் நிர்மாணிக்கப்பட்டு இன்று காலை 10.00மணிக்கு  மாநகரமற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டாலி சம்பிக்க ரணவக்கவினால் திறந்துவைக்கப்பட்டது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பணியின் பெயரில் இந்த தனியார் பஸ்தரிப்பு நிலையம் சகல வசதிகளுடன் கூடியதாக இரண்டு மாடிகளைக்கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.

ரணில்விக்கிரமசிங்கவினால் திறந்துவைக்கப்படும் என எதிர்பாக்கப்பட்ட நிலையில் அவரின் தவீர்க்க முடியாத காரணத்தினால் அமைச்சரும் அதிகாரிகளும்தான் திறந்து வைத்துள்ளனர் .