இந்த நாட்டின் தகவல் தொழில்நுட்ப துறையின் முன்னணி  நிறுவனமான அதன் சிறப்பையும் சிரேஷ்டத்துவத்தையும் தொடர்ந்தும் உறுதிப்படுத்தும் விதத்தில் தெற்காசியாவின் மிக உயரமாக நிர்மாணிக்கப்பட்டிருக்கும் இம் மாதம் 16ம் திகதி திறந்துவைக்கப்படவுள்ள தாமரைக் கோபுரத்தின் தகவல் மற்றும் தொழில்நுட்பங்களை வழங்கு நிறுவனமாக ஸ்ரீலங்கா டெலிகொம் (SLT) நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த பலம்பொருந்திய நிறுவனத்தின் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அங்கங்கள் உள்ளடக்கப்பட்டிருப்பதால் அதன் பெரும் பொறுப்புக்கள் SLT வசம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தாமரைக் கோபுரத்தின் பொறுப்புக்குரிய இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்கு படுத்தும் ஆணைக்குழு மற்றும் இலங்கை ரெலிகொம் ஆகியன உடன்படிக்கை ஒன்றை செய்துகொண்டதன் அடிப்படையில் இந்த தொலைத்தொடர்பு வசதிகளை நடைமுறைப்படுத்தும் அதிகாரத்தை SLT பெற்றுக்கொள்கிறது. அதன்படி SLT இன் பங்களிப்புடன் இரண்டு முக்கிய விடயங்கள் கையாளப்படும்

ஒப்டிகல் பைபர் தொழிற்நுட்பம் உள்நாட்டு வெளிநாட்டு தொலைத்தொடர்பு சேவைகளை கையாள்வதாகவும் உள்ளது. 

இதில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இணைப்புகள் அறுந்து போவதை தடுக்கும் விதத்திலான வசதிகள் உறுதிப்பட தயாரிக்கப்பட்டிருப்பதாகவும் அதன் பொறுப்பும் SLT வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதன் இணைப்பு வசதிகள் பெற்றுக்கொடுக்கும் விடயத்தில் இதன் சேவைகளை மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் ஒன்று தாமரைக் கோபுரத்தின் அமைக்கப்படும் பாரிய நிறுவனங்கள் சிறிய மத்தியதர வர்த்தக நிறுவனங்கள் மற்றும் அங்கு வருகின்ற  சாதாரண பொதுமக்களுக்கு தேவையான சகல தொலைத்தொடர்பு வசதிகளை கொண்டதாகும்.

தாமரைக் கோபுரத்தில் சேவைகளை வழங்கும் இந்த நாட்டின் ஏனைய தகவல் மற்றும் தொலைத்தொடர்பு சேவை வழங்குவோருக்கு அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் SLT யுடன் இருந்து பெற்றுக்கொள்ள முடியும்.

அடிப்படை தொலைதொடர்பு வசதிகளுக்கு புறம்பாக தாமரைக் கோபுர டிஜிடல் தொலைக்காட்சி பிரிவொன்றை அமைத்து அந்த தொலைக்காட்சி சேவையின் ஊடாக தொலைக்காட்சி நிறுவனங்கள் நிகழ்ச்சிகளை உள்வாங்கக்கூடிய தொழிற்நுட்பங்களை SLT ஆல் பெற்றுக்கொடுக்கப்படும்.

மேலும் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கைக்மைய SLT மூலம் இடம்பெறும் முக்கிய அம்சங்களான உள்ளக தொலைபேசி வசதி Local area Net Work (LAN) மற்றும் Wide area network (WAN)என்பன. கட்டட முகாமைத்துவ செயற்றிட்டம் உள்நுழைவு செயற்றிட்டம், CCTV, பொதுமக்கள் தொடர்பு வசதிகள், பாதுகாப்பு பிரிவு, தீயணைக்கும் பிரிவு என்பன போன்ற கட்டட உள்ளக செயற்பாடுகளுடன் 14 உப பிரிவுகளையும் SLT பெற்றுக்கொண்டுள்ளது. விசேட அம்சமாகும்