15 அங்குல அப்பிள் மெக்ப்ரோ மடிக்கணினிகளை விமானத்தில் எடுத்துச்செல்வதற்கு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் தடைவித்துள்ளது.

குறித்த மடிக்கணினி தீப்பற்றக் கூடிய அபாயத்தைக் கொண்டுள்ளதனாலேயே இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

15 அங்குல மெக்ப்ரோ மடிக்கணினியின் பற்றரி அதிகளவில் சூடாகும் நிலை காணப்படுவதாக அதனை உற்பத்திசெய்த நிறுவனம் அறிவித்திருந்த நிலையிலேயே ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் இவ்வாறு தடை செய்துள்ளது.

விமானப் பயணங்களை மேற்கொள்வோரில் இவ்வாறான தொழில்நுட்பசாதனத்தை பயன்படுத்துவோராயின்  அதனை உற்பத்தி செய்த நிறுவனத்திடம் உறுதிப்படுத்திக்கொள்ளுமாறு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.