சீனாவில்  தாய் ஒருவர் கிரெடிட் கார்ட் கடனை செலுத்துவதற்கும் கையடக்கத்தொலைபேசியை வாங்குவதற்கும் தனது இரட்டை குழந்தைகளை விற்றுள்ளார்.

சீனாவின்  கிழக்குப் பகுதியில் இருந்து 430 மைல் தூரத்திலுள்ள கிராமத்தில் வசித்த இரண்டு வெவ்வேறு குடும்பங்களுக்கு தனது ஆண் குழந்தைகளை விற்றுள்ளமை தெரியவந்துள்ளது.

ஆண் குழந்தைகள் இரண்டும் கடந்த செம்டம்பரில் குறைமாதத்தில் பிறந்துள்ளன. குறைவான எடையுடன் பிறந்தமையால் குழந்தைகள் பெரும்பாலும் போதுமான எடையைப் பெறும் வரை அதற்கேற்ற சூழலில் வைக்கப்பட வேண்டும். ஆனால் சுமார் இரண்டு வார வயதில் குறித்த இரு குழந்தைகளும் விற்கப்பட்டுள்ளன.

குறித்த தாய் தனது இரண்டு குழந்தைகளில் ஒரு குழந்தையை  45 ஆயிரம் யுவானுக்கும், மற்றொரு குழந்தையை  20 ஆயிரம் யுவானுக்கும் விற்றுள்ளார்.

அவர் இவ்வாறான முடிவை எடுப்பதற்கு காரணம்  குழந்தைகளை வைத்தியசாலையில் பராமரிக்க எவரும் உதவிபுரியவில்லையென தெரிவித்துள்ளார்.

பின்னர், தனது காதலியான குழந்தைகளின் தாய் குழந்தைகளை விற்றுவிட்டார் என்பதைக் கண்டுபிடித்த காதலன், தனது சூதாட்ட கடன்களை அடைப்பதற்கு பணத்தை கேட்டுள்ளார், ஆனால் அது ஏற்கனவே செலவிடப்பட்டதாகக் அவள் கூறினாள்.

இரு குழந்தைகளும் அவற்றை வாங்கிய குடும்பங்களிலிருந்து திரும்பப் பெறப்பட்டு, தற்போது அவர்களின் தாத்தா பாட்டிகளால் கவனிக்கப்பட்டு வருகின்றனர்.

வளர்ப்பு குடும்பங்கள் குழந்தைகளை திரும்ப ஒப்படைக்க ஒப்புக்கொண்ட பின்னர் தாய் மற்றும் காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

குழந்தை கடத்தல் குற்றத்திற்காக சீனாவில் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.