காலி - ரத்கம பொலிஸ் பிரிவில் உள்ள பூசா சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரபல பாதாள உலக உறுப்பினர் கஞ்சிபானை இம்ரானுக்கு, பகல் உணவுடன்  இரு தொலைபேசிகள், இரு சார்ஜர்கள் மற்றும் 15 அடி நீளமான வயர் ஆகியவற்றை உணவுப் பொதிக்குள் மறைத்து கொடுக்க முற்பட்ட கஞ்சிபானை இம்ரானின் தந்தை, சகோதரன்  உறவினர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

பூசா சிறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட இந்த ஆறு பேரும் மேலதிக விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக ரத்கம பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளதாகவும் அவர்களிடம் விசாரணைகள் இடம்பெறுவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர்  பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார்.