இலங்கைக்கான சீன தூதரகத்தின் பாதுகாப்பு இணைப்பதிகாரி சிரேஷ்ட கேர்ணல் சூ ஜியான்வெல் இராணுவ தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களை இம் மாதம் 10 ஆம் திகதி இராணுவ தலைமையகத்தில் சந்தித்தார்.

இச்சந்திப்பின் போது இருநாடுகளுக்கு இடையிலான உறவு முறையை மேம்படுத்தும் விடயம் தொடர்பாகவும், பயிற்சி நெறிகள் தொடர்பான விடயங்களையும் கலந்துரையாடிக் கொண்டார்கள்.

இராணுவ தளபதி சீன பாதுகாப்பு இணைப்பதிகாரியினால் முன் வைக்கப்பட்ட புரிந்துணர்விற்கும், ஒத்துழைப்பிற்கும் தனது நன்றிகளை தெரிவித்துக் கொண்டு சீன இராணுவத்துடன் உறவு முறையை மேம்படுத்துவதற்கான தனது விருப்பத்தையும் தெரிவித்துக் கொண்டார்.

இறுதியில் இவர்களது சந்திப்பை நினைவு படுத்தும் முகமாக இவர்கள் இருவருக்கும் இடையில் நினைவுச் சின்னங்கள் பரிமாரிக் கொள்ளப்பட்டன. இச்சந்தர்ப்பத்தில் சீன தூதரகத்தின் பிரதி பாதுகாப்பு இணைப்பதிகாரியும் இணைந்து கொண்டார். என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.