மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பான வழக்கு விசாரணைக்காக முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான ஆவணங்கள்  சிங்கப்பூரில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. 

அர்ஜுன் மகேந்திரனை நாட்டுக்கு அழைத்து வருவதற்காக சட்டமா அதிபரினால் தயாரிக்கப்பட்டு ஜனாதிபதியின் கையொப்பத்துடன்கூடிய, வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் ஊடாக அனுப்பி வைக்கப்பட்டுள்ள சுமார்  21,000 பக்கங்களை கொண்ட  ஆவணங்களே இவ்வாறு சிங்கப்பூரில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.