இரத்­தி­ன­புரி மாவட்­டத்தில் தெரிவு செய்­யப்­பட்ட பாட­சா­லை­களில் கல்வி கற்கும் வறிய குடும்­பங்­களைச் சேர்ந்த மாண­வர்­க­ளுக்கு புத்­தகப் பை, கற்றல் உப­க­ர­ணங்கள், பாத­ணிகள் வழங்கும் நிகழ்வு,  இறக்­கு­வானை பரி­யோவான் தமிழ் கல்­லூ­ரியில், எதிர்­வரும் 21ஆம் திகதி சனிக்­ கி­ழமை காலை 10 மணிக்கு நடை­பெ­ற­வுள்­ளது. 

மலை­யகத் தொழி­லாளர் வர்க்­கத்­தி­னரின் அனு­ச­ர­ணையில் கல்­லூ­ரியின் அதிபர் பூபா­ல­ப் பிள்ளை கம­லேஸ்­வ­ரனின் தலை­மையில் இடம்­பெ­ற­வுள்ள இந்­நி­கழ்வை பாட­சா­லையின் பழைய மாண­வர்கள் ஏற்­பாடு செய்­துள்­ளனர்.

மலை­யகத் தொழி­லாளர் வர்க்­கத்­தி­னரால் முன்­னெ­டுக்­கப்­படும் இந்த 8ஆவது செயற்­றிட்­டத்தில்  இ/பரி­யோவான் கல்­லூரி, இ/மாதம்பை இல:2 தமிழ் வித்­தி­யா­லயம், இ/ஸ்பிரிங்வூட் தமிழ் வித்­தி­யா­லயம், இ/தெத­ன­கல தமிழ் வித்தியாலயம், இ/ஹவுப்பே தமிழ் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.