“தி டைம்ஸ் ஹையர் எடியுகேஷன்” (Annual Times Higher Education world rankings 2020 ) பத்திரிக்கை, உலகில் சிறந்த பல்கலைக்கழகங்களின் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இதில் 92 நாடுகளில் இருந்து 1400 பல்கலைக்கழகங்கள் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

இப்பட்டியலில் உலகிலுள்ள பல்கலைக்கழகங்களின் தரவரிசையில் பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் தொடர்ச்சியாக 4 ஆவது தடவையாக முதலிடத்தில் உள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் இரண்டாவது இடத்தையும் பிரிட்டனின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் 3 ஆவது இடத்தையும் பெற்றுள்ளன.

இந்நிலையில், முதல் பத்து இடங்களில் உள்ள பல்கலைக்கழகங்களின் பட்டியல் வருமாறு, 

1. ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் - பிரித்தானியா

2. கலிபோர்னியா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் - அமெரிக்கா

3.கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் - பிரித்தானியா

4. ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் - அமெரிக்கா

5. மாசசூசெட்ஸ் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் - அமெரிக்கா

6 பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம் - அமெரிக்கா

7. ஹார்வார்ட் பல்கலைக்கழகம் - அமெரிக்கா

8. யேல் பல்கலைக்கழகம் - அமெரிக்கா

9.சிக்காக்கோ பல்கலைக்கழகம் - அமெரிக்கா

10.இம்ப்றீயல் கொலேஜ் லண்டன் - பிரித்தானியா

இத்தரவரிசைப்பட்டியலில் இலங்கையின் இரண்டு பல்கலைக்கழகங்கள் இடம்பிடித்துள்ளது.

இலங்கைப் பல்கலைக்கழகங்களில் பேராதனைப் பல்கலைக்கழகம் முதலிடம் பெற்றுள்ளது. இப்பல்கலைக்கழகம் உலகத் தரவரிசையில் 401 முதல் 500 வரையான பிரிவில் இடம்பெற்றுள்ளது.

இப்பட்டியிலுள்ள மற்றொரு இலங்கை பல்கலைக்கழகமான கொழும்பு பல்கலைக்கழகம் உலகத் தவரசையில் 100010 பிரிவில் இடம்பெற்றுள்ளது.