நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நிவ்வெளி கிராமத்தில் இயங்கி வரும் தையல்,மின் மற்றும் கணிணி பயிற்சி பாடசாலையின் மாணவ மாணவிகள் 26 பேர் உணவு ஒவ்வாமைக் காரணமாக திடீர் சுகவீனம் அடைந்துள்ளனர்.

இலங்கை தையல் பயிற்றுவிக்கும் அதிகார சபையினால் நடாத்தப்படும் நோர்வூட் நிவ்வெளி கிராமத்தில் இயங்கும் தையல், மின் மற்றும் கணிணி கலை பாடசாலையில், நேற்று 11ஆம் திகதியன்று 26 மாணவ மாணவிகள் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமிக்கப்பட்டதாக நிலையத்தின் அதிபர் திருமதி.பெஞ்சமின் தெரிவித்துள்ளார்.

குறித்த மாணவர்கள், மதிய உணவை உட்கொண்டதன் பின்னரே உணவு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளதாகவும், அதனால், ஏற்பட்ட வயிற்றோட்டத்தினாலேயே மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

மேலும், இவர்களில் 25 மாணவ மாணவிகள் சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பியதாகவும் ஒருவர் மட்டும் வைத்திய சாலையில் தங்கி சிகிச்சை பெறுவதாக வைத்திய சாலையின் உயர் அதிகாரி கூறினார்.

அத்தோடு, இவ்விடயம் தொடர்பாக நோர்வூட் பொலிஸார் மற்றும் நோர்வூட் பொது சுகாதார அதிகாரிகள் ஆகியோர் உணவு வகையை பரிசோதனைக்காக எடுத்து சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.