நாட­ளா­விய ரீதியில் எதிர்­வரும் சில தினங்களில் சீரற்ற கால­நிலை சீரான நிலைமைக்கு வரும். இருந்­த­போ­திலும் தொடர்ந்து சில தினங்­க­ளுக்கு கடும் காற்று வீசும் என்று எதிர்­பார்ப்­ப­தாக வளி­மண்­ட­ள­வியல் திணைக்­களம் அறி­வித்­துள்­ளது.

அத்­துடன் இடி மின்னல் தாக்கம் பெரும் அச்­சு­றுத்­த­லாக இருக்கும். ஆகையால் அனை­வரும் அவ­தா­ன­மாக இருக்க வேண்டும் என திணைக்­களம் மக்­க­ளிடம் கோரி­யுள்­ளது.

இது தொடர்­பாக வளி­மண்­ட­ள­வியல் திணைக்­களம் விடுக்­கப்­பட்ட அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது நாட்டில் ஏற்­பட்­டுள்ள சீரற்ற கால­நிலை இன்­றைய தினம் சற்று குறை­வ­டையும். இருந்­த­போ­திலும் பலத்த காற்­றுடன் கூடிய நிலையும் தொடர்ந்து நிலவும்.

இதன்­பி­ர­காரம் நாட­ளா­விய ரீதியில் கட­லோர பிர­தே­சங்­க­ளான வடக்கு கிழக்கு உள்­ளிட்ட சில பிர­தே­சங்­களில் இடைக்­கி­டையே மழை வீழச்சி பதி­வாகும். இதன்­பி­ர­காரம் வடக்கு வட­மத்­திய மற்றும் வடமேல் மாகா­ணங்­களில் இன்­றைய தினம் இடைக்­கி­டையே மழை பெய்யும். இதன்­பி­ர­காரம் 100 தொடக்கம் 150 மில்லி மீற்றர் வரை­யான மழை வீழச்சி இன்­றைய தினம் பதி­வாகும்.

ஆகையால் இடி மின்னல் தாக்­கத்­தி­லி­ருந்து நாட்டு மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். குழந்தைகளின் விடயத்தில் பெற்றோர்கள் அவதானமாக இருக்க வேண்டும்.