மனிதர்கள் வாழக்கூடிய நீர் நிறைந்த பூமியையொத்த கோள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு குறித்த கோளானது பூமியை போன்ற வெப்பநிலையுடன் காணப்படுவதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

குறித்த கோளானாது சூரியனில் இருந்து  110 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளதாக லண்டன்பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தீவிர ஆராய்ச்சியின் பின் அறிவித்துள்ளனர்.

செவ்வாய்க் கிரகத்தை விட 8 மடங்குகள் பெரிதானது எனவும் இக்கோளின் அருகில் நட்சத்திரங்கள் நெருக்கமாக காண்படுகின்றதாகவும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

பூமியானது தன்னை தானே சுற்றி வர 24 மணித்தியாலங்கள் எடுக்கின்ற நிலையில், சூரியனை சுற்றி வருவதற்கு 365 நாட்கள் தேவை படுகின்றது.

அந்த வகையில் புதிதாக கண்டுப்பிடிக்கப்பட்ட K2-18b எனும் கோள் தன்னை தானே சுற்றி வருவதற்கு 33 மணித்தியாலங்கள் எடுப்பதோடு சூரியனைச் சுற்றி வலம் வருவதற்கு 365 நாட்கள் தேவை படுவதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.