அமெ­ரிக்­காவில் இணைய விளம்­ப­ரத்தில் கூகுளின் ஏக­போக உரி­மையை எதிர்த்து 50 மாகாண அர­சு­களின் தலைமை வழக்­க­றி­ஞர்கள் விசா­ரணை நடத்­த­வி­ருப்­ப­தாக அறி­வித்­தி­ருப்­பது பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. 

உலகின் மிகப்­பெ­ரிய தேடு­பொறி நிறு­வ­ன­மான கூகுள், அமெ­ரிக்­காவை தலை­மை­யி­ட­மாக கொண்டு செயற்­பட்டு வரு­கி­றது. பொது­வாக இணை­ய­த்த­ளத்தில் நாம் ஏதேனும் ஒரு பொருளை வாங்­கு­வ­தற்­கா­கவோ அல்­லது ஒரு பொருளைப் பற்­றிய விப­ரங்கள் அறி­வ­தற்­கா­கவோ தேடி முடிந்­ததும், உடனே குறிப்­பிட்ட அந்த பொருட்­களைப் பற்றி விளம்­ப­ரங்கள் திரும்ப திரும்ப கூகுள் இணை­யத்­த­ளத்தில் வந்து கொண்­டி­ருக்கும். இதன் மூலம் கூகு­ளுக்கு இணைய விளம்­பர வருவாய் ஆண்­டு­தோறும் அதி­க­ரித்து வரு­கி­றது.

கூகுளின் இந்த நட­வ­டிக்­கைக்கு தற்­போது சிக்கல் வந்­துள்­ளது. இணைய விளம்­ப­ரத்தில் கூகுள் நிறு­வனம் ஏக­போக உரிமை கொண்­டி­ருப்­ப­தாக அமெ­ரிக்­காவின் 50 மாகா­ணங்­களின் தலைமை அரசு வழக்­க­றி­ஞர்கள் குற்­றஞ்­சாட்­டி­யுள்­ளனர். 

இது தொடர்­பாக, டெக்சாஸ் மாகாண அட்­டர்னி ஜெனரல் கென் பாக்ஸ்டன் தலை­மையில் 50 தலைமை அரசு வழக்­க­றி­ஞர்கள் விசா­ரணை நடத்­தவும் முடிவு செய்­யப்­பட்­டுள்­ளது. இது குறித்து அட்­டர்னி ஜெனரல் கென் பாக்ஸ்டன் அளித்த பேட்­டியில், ‘‘மக்­களில் பலரும் இணையம் இல­வசம் என நினைக்­கி­றார்கள். ஆனால், அதன் மூலம் கூகுள் நிறு­வனம் சுமார் ரூ.24 இலட்சம் கோடி வருவாய் ஈட்­டு­வதைப் பார்க்கும் போது, இணையம் இல­வ­ச­மில்லை என்றே எண்ணத் தோன்­று­கி­றது. இணைய விளம்­ப­ரத்தில் வாங்­குவோர், விற்­பவர், ஏலம் நடத்­துவோர், யூ டியூப் வீடி­யோக்கள் உள்­ளிட்ட அனைத்­திலும் கூகுள் நிறு­வனம் ஆதிக்கம் செலுத்­து­கி­றது’’ என்றார்.

நீதி­ப­தி­களின் இந்த குற்­றச்­சாட்டை கூகுள் மறுத்­துள்­ளது. அமெ­ரிக்க அரசின் சட்ட திட்­டங்­களை கூகுள் ஒரு­போதும் மீற­வில்லை என்றும் கூறி­யுள்­ளது. முன்­ன­தாக, கடந்த வாரம் பேஸ்புக் நிறு­வனம், பய­னா­ளர்­களின் தக­வல்­களை முறை­யாக பாது­காக்­கி­றதா என விசா­ரணை நடத்தப் போவ­தாக அரசு வழக்கறிஞர்கள் அறிவித்தனர். இதுபோல், அமெரிக்க நீதித்துறை தொடர்ந்து கூகுள், பேஸ்புக், அமேசான் போன்ற பிரபல நிறுவனங்களுக்கு சட்ட சிக்கலை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.