தெஹ்ரீக் இ தலிபான் பாகிஸ்தான் (டி.டி.பி.) அமைப்பின் தலைவர் நூர் வாலி மெஹ்சுத்தை சர்வதேச தீவிரவாதியாக அமெரிக்கா அறிவித்தது.

அமெரிக்காவின் இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்ட 18 ஆவது நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்ட நிலையில், மெஹசுத்தை 'உலக அளவில் குறிப்பிடத்தகுந்த தீவிரவாதி' என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. 

இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், 

கடந்த 2018 ஆம் ஆண்டு டி.டி.பி. தலைவர் முல்லா பசுல்லா மறைவுக்குப் பின் தெஹ்ரீக் இ தலிபான் பாகிஸ்தான் அமைப்பின் தலைவராக நூர் வாலி என்ற முப்தி நூர் வாலி மெஹ்சுத் பொறுப்பேற்றுக்கொண்டார். 

நூர்வாலி தலைமையில் பாகிஸ்தானில் நடந்த பல்வேறு தாக்குதலுக்கு டிடிபி அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.