பாதுகாப்பற்ற புகையிரத கடவையினால் மக்கள் அச்சம்

By R. Kalaichelvan

12 Sep, 2019 | 08:53 AM
image

தாண்டிக்குளத்திலி் காணப்படும் பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் பொதுமக்கள், மாணவர்கள் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

வவுனியா தாண்டிக்குளம் புகையிரதக் கடவையில்  பொருத்தப்பட்டுள்ள ஒளிச் சமிக்ஞை கடந்த ஐந்து மணி நேரத்திற்கு மேலாக தொடர்ச்சியாக ஒலி எழுப்பி இயங்கிக் கொண்டிருப்பதால் அவ் வீதி வழியாக போக்குவரத்து செய்யும் மக்கள் புகையிரதம் வருகின்றது என்ற அச்சத்தில் பயணத்தை தொடருவதில் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவித்தனர்.

நேற்று மாலையிலிருந்து குறித்த ஒளிச் சமிஞ்சை சிவப்பு நிறத்தில் ஒளிர்ந்தபடியும், தன்னிச்சையாக ஒலி எழுப்பி கொண்டும் உள்ளது. இதனால் அப் புகையிரதக் கடவையூடாக வேலைவிட்டு செல்வோர், மாலை வகுப்பிற்கு சென்று வீடு செல்லும் மாணவர்கள், பொதுமக்கள் எனப் பலரும் புகையிரதம் வருகின்து எனக் கருதி அவ்விடத்தில் காவல் நின்றதுடன் அசௌகரியங்களுக்கும் உள்ளாகியிருந்தனர்.

இதனையடுத்து அப்பகுதி மக்கள் அவ்விடத்திற்கு வந்து போக்குவரத்தினை ஒழுங்குபடுத்தியதுடன்  பொலிசாருக்கும் தெரியப்படுத்தினர்.

தொடர்ந்தும் ஒளிச்சமிஞ்சை இயங்கு நிலையில் இருப்பதால் அச்சத்துடனே அவ்விடம் காணப்படுகின்றது.

இதேவேளை குறித்த கடவையில் கடந்த வருடம் புகையிரத விபத்து ஏற்பட்டு இளைஞன் ஒருவர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்று மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை

2022-11-28 08:37:43
news-image

நாட்டின் பல மாகாணங்களில் மழை பெய்யும்...

2022-11-28 08:46:08
news-image

4 இலட்சம் கிலோ கிராம் பால்மா...

2022-11-27 13:52:12
news-image

29 ஆயிரம் வீரர்களின் தியாகத்தை மலினப்படுத்த...

2022-11-27 13:48:19
news-image

இராணுவத்தைக் கொண்டு அடக்குவேன் எனும் ஜனாதிபதியின்...

2022-11-27 13:43:17
news-image

ரணில் என்ற சரித்திரத்தினுள் ஹிட்லரை நாம்...

2022-11-27 12:43:04
news-image

முட்டைக்கான சரியான விலையை ஒருவார காலத்திற்குள்...

2022-11-27 12:39:05
news-image

ஜனாதிபதியின் தீர்மானங்கள் பொருளாதார நெருக்கடிக்கு ஒருபோதும்...

2022-11-27 16:06:02
news-image

முல்லைத்தீவு மாவட்டத்தில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்ற மாவீரர்நாள்...

2022-11-27 19:38:09
news-image

வட, கிழக்கில் உணர்வுபூர்வமாக மாவீரர் தினம்...

2022-11-27 20:41:22
news-image

இன்னும் 6 மாதங்கள் இடமளியுங்கள் -...

2022-11-27 18:20:50
news-image

யாழ். பல்கலைக்கழகத்தில் மாவீரர் நாள் உணர்வுபூர்வமாக...

2022-11-27 19:07:44