கிண்ணியா மற்றும்  மூதூர்  பொலிஸ் பிரிவில்  அனுமதிப் பத்திமின்றி உழவு இயந்திரத்தில் மணல் ஏற்றிச் அசன்ற இருவரை இன்று   (11) புதன்கிழமை நண்பகல் திருகோணமலை பிராந்திய போதைப் பொருள் தடுப்புப் பரிவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிண்ணியா பைசல் நகர் பகுதியில் அனுமதிப் பத்திரமின்றி உழவு இயந்திரத்தில் மணல் ஏற்றிய மகரூப் நகரைச் சேர்ந்த  21 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

மற்றும் மூதூர் நடுத் தீவு தி- புர்கான் வித்தியாலயத்திற்கு அருகாமையில் அனுமதிப் பத்திரமின்றி உழவு இயந்திரத்தில் மணல் ஏற்றிய மூதூர் நடுத்தீவு -02 ஐச் சேர்ந்த 22 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

இதையடுத்து குறித்த  சந்தேக நபர்களையும், கைப்பற்றப்பட்ட உழவு இயந்திரங்களையும் , கிண்ணியா ,மற்றும்  மூதூர்  பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.