பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடவுள்ள இலங்கை அணி மீது அந்நாட்டில் தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளதாக பிரதமர் அலுவலகம் எச்சரிக்கை விடுத்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துளளது.

இலங்கைக் கிரிக்கெட் அணியின் பாகிஸ்தான் சுற்றுப் பயணம் தொடர்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மீள் மதிப்பீடு ஒன்றை செய்ய உதவுமாறு இலங்கைக் கிரிக்கெட் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

விளையாட்டுத்துறை அமைச்சரின் ஊடாக பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள எச்சரிக்கையின் அடிப்படை யிலேயே கிரிக்கெட் நிறுவனம் இந்த பாதுகாப்பு மீள் மதிப்பீடு ஒன்றை செய்ய முடிவெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.