“புலதிசி” கடுகதி புகையிரத பயணத்தை ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி

Published By: Vishnu

11 Sep, 2019 | 08:33 PM
image

கொழும்பு கோட்டையிலிருந்து பொலன்னறுவை வரை பயணிக்கும் “புலதிசி” நகர் சேவை கடுகதி புகையிரதம் இன்று (11) பிற்பகல் தனது பயணத்தை ஆரம்பித்தது.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவும் இந்த பயணத்தில் இணைந்துகொண்டதோடு, அவர் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து மருதானை புகையிரத நிலையம் வரை பயணித்தார்.

தினமும் பிற்பகல் 3.00 மணிக்கு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து பயணத்தை ஆரம்பிக்கும் புகையிரதம் இரவு 7.45 மணிக்கு பொலன்னறுவையை சென்றடையும்.

மறுநாள் அதிகாலை 3.45 க்கு பொலன்னறுவையிலிருந்து மீண்டும் புறப்படும் புகையிரதம் மு.ப. 9.06 க்கு கோட்டை புகையிரத நிலையத்தை வந்தடையும்.

இப்புதிய கடுகதி புகையிரதம் பொலன்னறுவை, குருணாகல், மஹவ, கெக்கிராவ, ஹபரண, ஹிங்குரக்கொட ஆகிய புகையிரத நிலையங்களில் நிறுத்தப்படும்.

இலங்கை புகையிரத சேவைக்கு புதிதாக இணைக்கப்பட்டுள்ள புலதிசி நகர் சேவை கடுகதி புகையிரதம் எஸ் 13 சார்ந்த அதிநவீன சொகுசு புகையிரதமாகும்.

கொழும்பு கோட்டை மற்றும் பொலன்னறுவை நகரங்களுக்கிடையிலான விசேட புகையிரத சேவை கடந்த சில தசாப்தங்களாக இடம்பெறவில்லை என்பதுடன், அந்த குறையை நிவர்த்திக்கும் வகையிலேயே ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலையீட்டில் பொலன்னறுவை கடுகதி புகையிரத சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே மருதானை புகையிரத நிலையத்தின் கட்டுப்பாட்டு அறையையும் ஜனாதிபதி இன்று பார்வையிட்டார்.

அமைச்சர் அர்ஜுன ரணதுங்க, இராஜாங்க அமைச்சர் அசோக அபேசிங்க மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் உள்ளிட்ட அதிதிகள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08