தாயின் சடலத்தோடு மாயமான மகன், பேரன் ; தீவிர தேடுதலில் பொலிசார் !

Published By: Digital Desk 4

12 Sep, 2019 | 03:52 PM
image

வட்டவளை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட வட்டவளை பிட்டவீன் விக்டன் தோட்டத்தில் இறந்த தாயின் சடலத்தை முச்சக்கர வண்டியில் ஏற்றிசென்ற மகன் மற்றும் பேரபிள்ளை தொடர்பிலான விசாரணைகளை வட்டவளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

கடந்த 09 ஆம் திகதி விக்டன் தோட்டத்தில் சுகயினம் காரணமாக 70 வயதுடைய ராகை என்ற தாயின் சடலம் காணாமல் போயுள்ளமை தொடர்பில் நேற்று செவ்வாய்கிழமை வட்டவளை பொலிஸ் நிலையத்தில் விக்டன் தோட்டமக்கள் முறைபாடு ஒன்றினை பதிவு செய்துள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.

இதையடுத்து பதிவு செய்யபட்ட முறைபாட்டுக்கு அமைய விசாரணைகளை மேற்கொண்ட வட்டவளை பொலிஸார் தெரிவிக்கையில், குறித்த தோட்டபகுதியில் வசித்த ஏழுபது வயதான ராகை என்ற தாயை சுகயினமுற்ற நிலையில் வீட்டில் இருந்ததாகவும், மகனின் மனைவி வெளிநாட்டில் பணிபுரிந்து வந்நதாகவும் இரண்டு வருடங்களின் பின் வீடு திரும்பியதாகவும் தெரிவிக்கபடுகிறது.

தாய் சுகயினம் காரணமாக 09 ஆம் திகதி உயிரிழந்த நிலையில் எனது மகனும் கணவரும் இணைந்து சடலத்தை முச்சக்கர வண்டியில் கொண்டு சென்றதாகவும் இதுவரையிலும் சடலத்தை எங்கு கொண்டு சென்று என்ன செய்தார்கள் என்பது தொடர்பில் இது வரை எனக்கு தெரியாது என இவர்கள் தொடர்பில் எவ்வித தகவல்களும் இல்லை என குறித்த தாயின் மருமகளால் வட்டவளை பொலிஸாருக்கு வழங்கபட்ட வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த தாயை அவரது மகன் கொலைசெய்து, சடலத்தை கொண்டு சென்றிருக்கலாம் என தோட்டமக்கள் தெரிவித்துள்ளனர். குறித்த சடலத்தையும் மகன் மற்றும் பேரபிள்ளையை பொலிஸாருடன் சேர்ந்து பொதுமக்களும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையடுத்து சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வட்டவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02