(ஆர்.விதுஷா)

கடந்த வாரத்தில் மாத்திரம் ஐந்திற்கும் மேற்பட்ட  மலேரியா  நோயாளர்கள் அடையாளம்  காணப்பட்டுள்ளனர்.

இந்த  வருடத்தில் இதுவரையில் 28 பேர் மலேரியா நோயின்    தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளமை பதிவாகியுள்ளது. இலங்கையில்  மலேரியா நோய் முற்று முழுதாக ஒழிக்கப்பட்டு விட்டதாக  உலக  சுகாதார  ஸ்தாபனம் சில வருடங்களுக்கு முன்னர் கூறியிருந்த  நிலையில் நாட்டில் மீண்டும் மலேரியா நோய் பரவும் அபாயம்  ஏற்பட்டுள்ளதாக சுகாதார  பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.