(நா.தினுஷா)

பௌத்த பிக்கு குடும்பங்களின் நலன் கருதி எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் பௌத்த பிக்குகளின் அவர்களின் பெற்றோர்களுக்கான காப்புறுதித் திட்டமொன்றை அறிமுகப்படுத்த தீர்மானித்துள்ளதாக புத்தசாசன , வடமேல் அபிவிருத்தி அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்தார்.

 

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று கிழமை காலை  இடம்பெற்ற ஊடகவியலாளர்  சந்திப்பில் இதனை குறிப்பிட்ட அவர் மேலும் கூறியதாவது,

பலவருட காலமாக பிக்கு, பிக்குணி, துறவி ஆகியோரால் பௌத்த தர்மம் பாதுகாக்கப்பட்டு வருகிறது. ஆகவே  அவர்களுக்கு தேவையான  நிவாரங்களை பெற்றுக்கொடுக்க வேண்டியது எமது பொறுப்பாகும் என அவர்  தெரிவித்தார்.