எஹலியகொட - தெஹியோவிட்ட வீதியில் ஏற்பட்ட பாரிய மண்சரிவில் வீதியில் சென்ற கார் ஒன்று இழுத்துச் செல்லப்பட்டுள்ளது. இதன்போது காரில் சென்ற நபர்கள் மண்ணில் புதையுண்ட போதும் பிரதேச மக்களால் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

எனினும் கார் மண்ணில் புதையுண்டுள்ளது. மீட்பு பணிகளில் பொலிஸார் இராணுவத்தினர் மற்றும் பிரதேச மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.