பாகிஸ்தான்  அணிக்கு எதிராக விளையாடவுள்ள 15 பேரடங்கிய ஒருநாள் இலங்கை குழாமையும் 16 பேரடங்கிய இருபதுக்கு - 20 இலங்கை அணி குழாமையும் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணி அங்கு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு - 20 தொடரிலும் விளையாடவுள்ளது.

இந்நிலையில், ஒருநாள் போட்டிக்கு இலங்கை அணித் தலைவராக லகிரு திரிமான்னே நியமிக்கப்பட்டள்ள அதேவேளை, இருபதுக்கு - 20 போட்டிக்கு அணித் தலைவராக தசுன் சாணக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

15 பேரடங்கிய ஒருநாள் இலங்கை குழாம் வருமாறு, 

லகிரு திரிமான்னே ( அணித் தலைவர் ) , தனுஷ்க குணதிலக, சதீர சமரவிக்கிரம, அவிஸ்க பெர்னாண்டோ, அஞ்சலோ பெரேரா, ஓஷத பெர்னாண்டோ, செஹான் ஜெயசூரிய, தசுன் சாணக்க, மினோட் பாணுக, வனிது ஹசரங்க, லக்ஷான் சந்தகன், நுவான் பிரதீப், இசுறு உதான, கசுன் ராஜித, லகிரு குமார, 

16 பேரடங்கிள இருபதுக்கு - 20 இலங்கை குழாம் வருமாறு,

தசுன் சாணக்க (அணித் தலைவர் ), தனுஷ்க குணதிலக, சதீர சமரவிக்கிரம, அவிஸ்க பெர்னாண்டோ, ஓஷத பெர்னாண்டோ,செஹான் ஜெயசூரிய,அஞ்சலோ பெரேரா,பாணுக ராஜபக்ஷ, மினோட் பாணுக, லகிரு மதுசங்க, வனிது ஹசரங்க, லக்ஷான் சந்தகன், இசுரு உதான, நுவான் பிரதீப், நுவான், பிரதீப், கசுன் ராஜித, லகிரு குமார