(இராஜதுரை ஹஷான்)

பொதுஜன பெரமுனவின் கொள்கையையும் , ஜனாதிபதி வேட்பாளரையும்  ஏற்றுக் கொள்ளும் சுதந்திர கட்சியினருக்கு ஏன்  மொட்டு சின்னத்தினை ஏற்க முடியாது.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் வீழ்ச்சிக்கு தற்போது  கட்சியின் முக்கிய பதவிகளில் உள்ள பொதுச்செயலாளர் தயாசிறி உள்ளிட்ட குழுவினரே பொறுப்பு கூற வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில்  இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு  குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசிய கட்சியின் கொள்கைக்கு எதிராகவே உருவாக்கப்பட்டது.  முன்னாள் ஜனாதிபதி  மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி காலத்தில் சுதந்திர கட்சி பலமான நிலையில் இருந்தது. ஆனால் நடைமுறையில் அவ்வாறு  இல்லை  ஐக்கி ய தேசிய கட்சிக்கு சவால் விடுக்கும் பிரதான கட்சியாக இன்று பொதுஜன பெரமுன எழுச்சி பெறும் அளவிற்கு சுதந்திர கட்சி பலவீனமடைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.