நாட்டின் பலபாங்களில் அடுத்த சில மணி நேரங்களில் பலத்தமழை மற்றும் காற்று வீசக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

அந்தவகையில், வடக்கு, கிழக்கு, மத்திய, மேல், சப்ரகமுவ, வடமத்திய ஆகிய மாகாணங்களில் 100 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இதேவேளை, மணித்தியாலத்திற்கு 70 முதல் 80 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் எதிர்வு கூறியுள்ளது.

இதனால் பொதுமக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.