பசுபிக்கின் இராணுவசமநிலையை அமெரிக்காவிற்கு சாதகமாக மாற்றியமைக்க கூடிய நவீன ஏவுகணையொன்றுடன் அமெரிக்காவின் போர்க்கப்பலொன்று பசுபிக்கில் நடமாடுகின்றது என ஆய்வார்கள் தெரிவித்துள்ளதாக சிஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவின் யுஎஸ்எஸ் கப்பிரியலி கிவ்வொட்ஸ் என்ற போர்க்கப்பல் அமெரிக்க கடற்படையின் அதிநவீன ஏவுகணையுடனும் தாக்குதலிற்கு பயன்படுத்தப்படும் ஆளில்லா விமானத்துடனும் கடந்த மாதம் சான்டியாகோவிலிருந்து புறப்பட்டுள்ளது என சிஎன்என் தெரிவித்துள்ளது.

புதிய ஏவுகணை ராடர்களின் கண்களில் மண்ணை தூவக்கூடியது எதிரிகளின் பாதுகாப்பு நிலைகளை தவிர்த்து செல்லக்கூடிய திறன் உடையது என அமெரிக்காவின் ஆயுததயாரிப்பு நிறுவனமான ராய்தியோன் தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட புதிய ஏவுகணை 100 மைல்களிற்கு அப்பால் செல்லக்கூடியது,ஹெலிக்கொப்டர்களில் பொருத்தி இதனை பயன்படுத்துவதால் கப்பல்கள் தங்கள் ராடர்களிற்கு அப்பால் உள்ள இலக்குகளையும் குறிவைக்கலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆளில்லாமல் இயங்ககூடிய ஹெலிக்கொப்டர்களில் இவற்றை பொருத்தி பயன்படுத்தலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த வகை ஆவணங்களை அமெரிக்கா பயன்படுத்த ஆரம்பித்துள்ளதை உறுதி செய்துள்ள கடற்படை அதிகாரியொருவர் அமெரிக்க கடற்படையின் தாக்குதல் வல்லமையை இது அதிகரிக்கும் என தெரிவித்துள்ளார்.

பசுபிக்கில் சீனாவின் படைபலத்தை எதிர்கொண்டு மோதி தப்பிக்ககூடிய படைபலத்தை அமெரிக்காவின் பென்டகன் உருவாக்கிவருகின்றது என  பாதுகாப்பு ஆய்வாளர் திமோதி ஹெத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா குறிப்பிட்ட வகை ஏவுகணையை கப்பலில் நிறுவியுள்ளமை முக்கியமான செய்தியை தெரிவிக்கின்றது என குறிப்பிட்டுள்ள பாதுகாப்பு ஆய்வாளர் கார்ல் ஸ்கூஸ்டர் மேற்கு பசுவிக்கில் தற்போது சீனா செலுத்திவரும் ஆதிக்கத்தை இது இறுதியில் முறியடிக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

பசுவிக்கில் சீனாவே தற்போது குறூஸ் ஏவுகணைகளில் அதிக பலம் பொருந்தியதாக காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

பசுபிக்கில் காணப்படும் சமநிலையை சரிசெய்வதற்கான அமெரிக்காவின் முதல் முயற்சியிது எதிர்காலத்தில் மேலும் பல நடவடிக்கைகள் இடம்பெறலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த ஆயுதங்கள் சீனாவிற்கு மாத்திரமல்ல ஆசியா பசுவிக்கிலுள்ள அமெரிக்காவின் நேசநாடுகளிற்கும் ஒரு செய்தியை தெரிவிக்கின்றன என ஆய்வாளர் ஹெத் தெரிவித்துள்ளார்.

தென்சீனா கடற்பரப்பில் தீவுகளிற்கான உரிமை மற்றும் கனியவளங்களிற்கான உரிமை கோரல்கள் காரணமாக சீனாவிற்கும் சிங்கப்பூர் வியட்நாம் போன்ற நாடுகளிற்கும் இடையில் முறுகல்நிலை காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

வோசிங்டன் பசுவிக்கில் தன்னை சீனாவை விட நம்பகதன்மை மிக்க சகாவாக முன்னிறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக தென்சீனா கடற்பரப்பில் அமெரிக்கா தன்னை நம்பகதன்மை மிக்க சகாவாக முன்னிறுத்தி வருகின்றது,தொடர்ச்சியாக கடல்சார் களில் ஈடுபடும்  நடவடிக்கைகளில் ஈடுபடும் அமெரிக்கா சுதந்திரமான இந்தோ பசுவிக்கிற்கான தனது அர்ப்பணிப்பு என தெரிவித்து வருகின்றது.

இதேவேளை அப்பகுதியில் அமெரிக்காவின் பிரசன்னம் அமைதிக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றது என சீனா தெரிவித்து வருகின்றது.