இந்திய அணியின் தலைவர் விராட்கோலி அனுஸ்கா சர்மாவுடன் தான் காணப்படும் படமொன்றை வெளியிட்டுள்ளதை தொடர்ந்து இரசிகர்கள் அந்த படத்தை கேலி செய்துவருகின்றனர்.

விராட்கோலி கடற்கரையில் அனுஸ்கா சர்மாவுடன் நீச்சலுடையில் காணப்படும் படமொன்றை வெளியிட்டுள்ளார்.

விராட்கோலி தனது மனைவியுடன் காணப்படும் இந்த படம் இந்தியாவின் ஆடைதொழிற்துறையின் வீழ்ச்சியை வெளிப்படுத்துகின்றது என ரசிகர்கள்டுவிட்டரில் தெரிவித்து வருகின்றனர்.

மீண்டும் மீண்டும் விராட்கோலி இவ்வாறன படத்தை வெளியிடுகின்றார் என தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ள  ரசிகர் ஒருவர் இதற்கு இந்தியாவின் பொருளாதார வீழ்ச்சிதான் காரணமாக என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தியாவின் ஆடைத்தொழிற்துறை வீழ்ச்சியடைவதற்கான தெளிவான அறிகுறி என சுபம் என்பவர் பதிவு செய்துள்ளார். பிரபலங்கள் கூட உடுப்பதற்கு ஆடையில்லாத நிலையில் உள்ளனர் பொருளாதார வீழ்ச்சி என்பது உண்மை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேகருத்தை வேறு பல ரசிகர்களும் பதிவு செய்துள்ளனர்.

நிதியமைச்சர் சீதாராமன் அவர்களே இந்த கோடீஸ்வரர்கள் எப்படி ஆடை விற்பனையை குறைக்கின்றனர் பாருங்கள் என விராட்டின் படத்திற்கு ஒருவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

இந்திய ஆடைத்தொழில்துறை வீழ்ச்சியடைந்து வருகின்றது இதன் காரணமாக விராட்கோலி இந்தியர்களை ஆடைகளை அணிவதை குறைத்து இந்திய பொருளாதாரத்திற்கு உதவுமாறு ஊக்குவிக்கின்றார் என  ஒருவர் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.