அமெரிக்க ஜனாதிபதி தனது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவியிலிருந்து ஜோன் பொல்டனை நீக்கியுள்ளார்.

வெள்ளை மாளிகைக்கு அவரது சேவை இனிமேலும் அவசியமில்லை என நான் அறிவித்தேன் என டுவிட்டரில் டொனால்ட் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

அவரது பல யோசனைகளை நான் நிராகரித்துள்ளேன் எனது நிர்வாகத்தை சேர்ந்தவர்களும் நிராகரித்துள்ளனர் என டிரம்ப்  குறிப்பிட்டுள்ளார்.

அவரது இராஜினாமா கடிதம் எனக்கு கிடைத்துள்ளது நான் தேசிய பாதுகாப்பு ஆலோசகரை அடுத்த வாரம் நியமிப்பேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஜோன்பொல்டனின் முன்னுரிமைக்குரிய விடயங்களிற்கும் ஜனாதிபதியின் முன்னுரிமைக்குரிய விடயங்களிற்கும் இடையில் முரண்பாடு காணப்பட்டது என வெள்ளை மாளிகை பேச்சாளர் ஹோகன் கிட்லே தெரிவித்துள்ளார்.

தன்னுடைய நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்க கூடிய எவரையும் நியமிப்பதற்கான உரிமை உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நீக்கப்படுவதற்கு ஒரு விவகாரம் மாத்திரம் காரணமி;ல்லை என அவர் தெரிவித்துள்ளார்.