வென்னப்புவ பிரதேச சபை உறுப்பினர், அவரது சகோதரியின் விளக்கமறியல் நீடிப்பு

Published By: Priyatharshan

11 Sep, 2019 | 11:55 AM
image

வென்னப்புவ பிரதேச சபையின் உறுப்பினர் துலக்ஷி ஜமோதரி பெர்னாண்டோ மற்றும் அவரது சகோதரி ஆகியோரின் விளக்கமறியல் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்தேக நபர்கள் இருவரும் இன்று மாரவில நீதீவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இருவருகு்கும் விளக்கமறியலை நீடித்து நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸாரின் செயற்பாட்டிற்கு இடையூறு ஏற்படுத்தியதாகத் தெரிவித்து கைதுசெய்யப்பட்ட வென்னப்புவ பிரதேச சபையின் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினரும் அவரது சகோதரியையும் கடந்த 6 ஆம் திகதி மாரவில நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது நீதிவான் சந்தேகநபர்களை இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டிருந்தார்.

வென்னப்புவ சிரிகம்பல பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய துலக்ஷி ஜமோதரி பெர்ணான்டோ எனப்படும் வென்னப்புவ பிரதேசசபை உறுப்பினரும் , அவரது சகோரதரி இருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

அதேவேளை இந்த சம்பவம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டிருந்த இவர்களின் தந்தையான சமன் அஷோக் குமார் பெர்னாண்டோ 3 இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் செல்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உடன்பிறந்த அண்ணனை கத்தியால் குத்திக் கொன்ற...

2025-01-22 14:10:47
news-image

வெள்ளவத்தையில் பெண் கடத்தல் ;  முன்னாள்...

2025-01-22 13:47:52
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-01-22 13:26:40
news-image

பாடசாலை மாணவி கடத்தல் ;  பதில்...

2025-01-22 13:23:20
news-image

யாழில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய வர்த்தக...

2025-01-22 13:23:42
news-image

அர்ஜூனமகேந்திரனை இலங்கைக்கு கொண்டுவருவதில் சிக்கல்களை எதிர்கொள்கின்றோம்...

2025-01-22 13:08:48
news-image

சிறைச்சாலை கைதிக்கு புகையிலைகளை கொண்டு சென்றவர்...

2025-01-22 13:03:48
news-image

முச்சக்கர வண்டி சாரதியை தடுத்துவைத்து சித்திரவதை...

2025-01-22 12:55:09
news-image

இலங்கையில் பதில் துணைவேந்தர்களுடன் இயங்கும் பல்கலைக்கழகங்களின்...

2025-01-22 12:58:57
news-image

களுத்துறை தேவாலயத்தில் பெறுமதியான சிலைகள் திருட்டு...

2025-01-22 12:36:59
news-image

திருகோணாமலை - மூதூரின் தாழ் நிலப்பகுதிகள்...

2025-01-22 12:44:35
news-image

இலங்கையில் சமத்துவம், உண்மை, நீதிக்கான முயற்சிகளை...

2025-01-22 12:18:15