அரசியல் அதிகாரம் கொண்டவர்கள், சட்டவிரோத வியாபாரிகளுமே சூழல் மாசடைவிற்கு காரணம் - ஜனாதிபதி

Published By: Daya

11 Sep, 2019 | 09:04 AM
image

இலங்கையில் போன்றே ஏனைய உலக நாடுகளிலும் அரசியல் அதிகாரம் கொண்டவர்களும் சட்டவிரோத வியாபாரி களுமே சூழலை மாசடையச் செய்கின்றனர் என ஜனாதிபதி தெரிவித்தார்.

நேற்று பிற்பகல் துல்ஹிரிய மார்ஸ் எதினா மண்டபத்தில் ஆரம்பமான அயன மண்டல உயிரியல் மற்றும் பாதுகாப்பு அமைப்பின் ஆசிய பசுபிக் வலய மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இவ்வாறு தெரிவித்தார்.

பேண்தகு மானிட, சமூக மற்றும் சுற்றாடல் இருப்பினை உறுதி செய்வதற்கு மனிதனுக்கும் சுற்றாடலுக்கும் இடையிலான சமநிலையை பேண வேண்டியது மிக முக்கியமான தேவைப்பாடாகும் என ஜனாதிபதி  சுட்டிக்காட்டினார்.

உலகளாவிய பேண்தகு சுற்றாடல் முகாமைத்துவ செயற்பாட்டில் மிக முக்கிய பணி ஆசிய பசுபிக் வலயத்தின் அயன மண்டல நாடுகளில் வசிக்கும் அனைவரிடமும் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரி வித்த ஜனாதிபதி உயிர்ப்பல் வகைமையுடைய, தனித்துவமான, தேசத்திற்குரித்தான பெருமளவிலான தாவரங்களும் விலங்குகளும் இவ்வலயத்தில் காணப்படுவதற்கு இதுவே காரணமாகும் எனக் குறிப் பிட்டார்.

தனிமைப்படுத்தப்பட்ட வனாந்தரங்கள் ஒன்றிணையும் வகையில் வன வளர்ப்பில ஈடுபடுவதனூடாக குறித்த வனாந்தரப் பகுதிகள் மீண்டும் இணைந்து அனைத்து உயிரினங்களினதும் எதிர்கால இருப்பு உறுதிசெய்யப்படும் என இதன்போது சுட்டிக்காட்டிய ஜனாதிபதி சுற்றாடல் ரீதியில் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள பிரதேசங்களை இனங்கண்டு அவற்றை பாதுகாத்து தனித்துவமான அரிய வகை தாவரங்களையும் விலங்குகளையும் பாதுகாத்தல் எதிர்காலத்திற்கான எமது இன்றைய கடமையாகும் என்பதையும் தெளிவுபடுத்தினார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ஏற்கெனவே அயன மண்டல நாடுகளின் உயிர்ப்பல் வகைமை தொடர்பிலான கருத்தாய்வு தற்போது உலகளாவிய ரீதியில் இடம்பெற்று வருவதாக குறிப்பிட்டார். 

மேலும் ஆசிய பசுபிக் வலயத்தில் அயன மண்டல உயிர்ப்பல்வகைமையை பாதுகாப்பதற்கான உள்நாட்டு, வெளிநாட்டு விஞ்ஞானிகள் பங்குபற்றும் இம்மாநாடு இலங்கையில் இடம்பெறுவது எமது நாடு பெற்றுக்கொண்ட பாரிய வெற்றியாகும் எனவும் அது இலங்கை புத்திஜீவிகள் பெற்றுக்கொண்ட அரிய சந்தர்ப்பமாகும் எனவும் குறிப்பிட்டார்.

அத்துடன் இலங்கையில் பெருமளவிலான உணவுப் பயிர்கள் வன விலங்குகளால் அழிக்கப்படுகின் றமை தொடர்பில் இதன்போது கவனம் செலுத்திய ஜனாதிபதி, அதற்கான நிரந்த தீர்வு தொடர்பில் இம்மாநாட்டின் போது சகோதர உலக நாடுகளின் அனைத்து ஆய்வாளர்களும் கல்விமான்களும் முக்கிய கவனம் செலுத்துவார்கள் என தான் நம்புவதாகவும் தெரிவித்தார்.

அயன மண்டல உயிரியல் மற்றும் பாதுகாப்பு சங்கம் 13ஆவது முறையாக நடத்தும் ஆசிய பசுபிக் சம்மேளனத்தின் ஒன்றுகூடல் இலங்கையில் முதன்முறையாக இன்று முதல் 13ஆம் திகதி வரை இடம்பெறுவதுடன், மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சு, கொழும்பு பல்கலைக்கழகம், சபரகமுவ பல்கலைக்கழகம், அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்களின் ஒருங்கிணைப்பில் இம்மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாநாட்டின் செயற்பாடுகள் அடங்கிய கைநூல் இதன்போது ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

இராஜாங்க அமைச்சர் அஜித் மான்னப்பெரும, பாராளுமன்ற உறுப்பினர்களான லசந்த அழகியவன்ன, திலங்க சுமதிபால, மகாவலி மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் அநுர திசாநாயக்க உள்ளிட்ட அமைச்சின் செயலாளர்கள், அரச அதிகாரிகள் மற்றும் இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் உள்ளிட்ட அதிதிகள் பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37