பொலிஸார் மீது துப்பாக்கி பிரயோகம், துப்பாக்கிகள் களவு சம்பவம் ; கைதான அறுவரிடமும் 48 மணி நேர விசாரணை

Published By: Vishnu

10 Sep, 2019 | 09:57 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

அக்குரஸ்ஸ பொலிஸார் மீது துப்பாக்கிப் பிரயோகம் மற்றும் பாணந்துறை வடக்கு பொலிஸ் நிலையத்தில் இருந்து காணாமல்போன இரு துப்பாக்கி விவகாரம் தொடர்பிலான குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்ட ஆறு பேரிடமும் 48 மணி நேர பொலிஸ் தடுப்புக் காவலின் கீழ் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸ் அத்தியட்சர் ருவான் குணசேகர தெரிவித்தார். 

அக்குரஸ்ஸ பொலிஸ் பொறுப்பதிகாரி பிரேமலால் டி சில்வவாவுக்கு விஷேட கிடைத்த விசேட தகவலுக்கு இணங்க நேற்று மாலை 4.00 மணியளவில் பரதுவ பகுதியில் வைத்து 16 வயதுடைய கூலி வேலை செய்யும் சந்தேக நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டார்.

அவர், பொலிஸார் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய போது மோட்டார் சைக்கிளில் பயணித்த மூவரில் ஒருவர் என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்த நிலையில், ஏனைய இருவர் தொடர்பிலும் அவரிடம் விசாரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஏனைய இருவர் தொடர்பிலும் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

ஒருவர் தெலிஜ்ஜவில பகுதியைச் சேர்ந்த 28 வயதான பாணந்துறை இராணுவ முகாமில் கடமையாற்றும் இராணுவ சிப்பாயும் மற்றையவர் எல்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 21 வயதான மேலும் ஒருவரும் ஆவார்.  

இவரே மோட்டார் சைக்கிளை சம்பவத்தின்போது செலுத்தியுள்ள நிலையில், இராணுவ சிப்பாயே பொலிசாரை சுட்டதாக விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

இந் நிலையில், அக்குரஸ்ஸ பொலிஸார் குறித்த சந்தேக நபர்களிடம், சம்பவத்தின் போது பயணித்த மோட்டார் சைக்கிள் மற்றும் துப்பாக்கிகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

இதன்போது மோட்டார் சைக்கிள் கைதான இராணுவ வீரரின் பக்கத்து வீட்டுக் காரருக்கு சொந்தமானது எனவும், வேரு ஒரு தேவைக்காக எடுத்துச் செல்வதாக கூறி அவர் அப்போது அதனைப் பெற்று வந்துள்ளமையும் தெரியவரவே, அந்த மோட்டார் சைக்கிளை பொலிசார் மீட்டுள்ளனர்.

இதனையடுத்து ரீ 56 ரக துப்பாக்கி தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து எல்கிரிய - விக்கும்கம  பகுதியில் துப்பாக்கி மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிப்படுத்தப்பட்டற்கமைவாக ரி 56 ரக துப்பாக்கிள் இரண்டும், 28 தோட்டாக்களும் மீட்க்கப்பட்டுள்ளன. 

இதனையடுத்து முன்னெடுத்த விசாரணைகளிலேயே  அண்மையில் பாணந்துறை வடக்கு பொலிஸ் நிலையத்தில் இருந்து காணாமல் போன இரு துப்பாக்கிள் குறித்த மர்மம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பில் இராணுவ சிப்பாய் ஒருவர் உட்பட மூவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

அதன்படி இந்த இரு விவகாரங்களிலும் கைதுசெய்யப்பட்ட இரு இராணுவ வீரர்கள் உட்பட 6 பேரிடமும் 48 மணி நேர தடுப்புக் காவல் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இழுவை மீன்பிடியை படிப்படியாக நிறுத்தலாம் ;...

2025-03-26 17:29:34
news-image

வவுணதீவில் மாடு திருடியபோது பொதுமக்களால் தாக்கப்பட்ட...

2025-03-26 17:42:04
news-image

4 உணவக உரிமையாளர்களுக்கும் எதிராக ரூபா...

2025-03-26 17:35:26
news-image

8 இலட்சம் ரூபா பெறுமதியான கோடாவுடன்...

2025-03-26 17:28:12
news-image

அமெரிக்க தூதுவர் ஜூலி சங் -...

2025-03-26 17:15:00
news-image

அஸ்வெசும பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை வழங்குவதில்...

2025-03-26 17:25:49
news-image

பிரிட்டனின் தடைகள் ஒருதலைப்பட்சமானவை - வெளிவிவகார...

2025-03-26 17:06:23
news-image

திருகோணமலை மாவட்ட சட்டத்தரணிகள் சங்க தலைவியாக...

2025-03-26 17:07:14
news-image

14 மாவட்டங்களுக்கு கடும் மின்னல் தாக்கம்...

2025-03-26 17:29:02
news-image

கல்கிஸ்ஸை, வெள்ளவத்தை, பாணந்துறை கடற்கரை பகுதிகளில்...

2025-03-26 16:56:05
news-image

வாழைச்சேனையில் 9 கிராம் 30 மில்லிகிராம்...

2025-03-26 17:25:24
news-image

தம்புத்தேகம குடிநீர் திட்டத்தின் பணிகள் மீள...

2025-03-26 16:51:57