அறிமுக இயக்குனர் சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் ஜீ வி பிரகாஷ் குமார் நடிக்கவிருக்கும் பெயரிடாத படத்தில் அவருக்கு ஜோடியாக புதுமுக நடிகை திவ்யபாரதி அறிமுகமாகிறார்.

‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்தின் வெற்றிக்குப் பிறகு இசை அமைப்பாளரும் நடிகருமான ஜீ வி பிரகாஷ் குமார், அறிமுக இயக்குனர் சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். 

இதனை ஆக்சஸ் பிலிம் பேக்டரி என்ற பட நிறுவனம் சார்பில் டில்லிபாபு தயாரிக்கிறார். இந்தப்படத்தில் ஜிவி பிரகாஷ் குமாருக்கு ஜோடியாக நடிக்க கோவையை சேர்ந்த மொடலிங் மங்கையான திவ்யபாரதி தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்.

க்ரைம் திரில்லர் ஜேனரில் தயாராகவிருக்கும் இந்தப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நாளை மாலை 6 மணி அளவில் இணையத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதனிடையே ஜீ வி பி என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் ஜீ வி பிரகாஷ்குமார் நடிப்பில் தயாரான 100% காதல் மற்றும், ஐங்கரன் இரண்டு படங்களும் அடுத்த மாதம் வெளியாகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.