(நா.தினுஷா)

மொழி பயிற்றுவிப்பாளர்களை திசைமுகப்படுத்துவதற்கான தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் 1 300 மும்மொழி ஆசிரியர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கும் வைபவம் தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சசின் ஏற்பாட்டில்  இன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்றது.

அலரிமாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த வைபவத்தில் பிரதமர் உட்பட சபாநாயகர் கரு ஜயசூரிய, தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் மனோ கனேசன், உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் வஜிர அபயவர்தன, மின்வலு, எரிசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.திலகராஜ் , ஏ.அரவிந்த் குமார் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

இந்த நிகழ்வில் பிரதானமாக சிங்கள மொழி மாணவர்களுக்கு தமிழ் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் தமிழ் மொழி மாணவர்களுக்கு சிங்கள மொழி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் இந்த கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டன. இவ்வாறு இணைத்துக்கொள்ளப்படும் 1300 ஆசிரியர்களுக்கும் முதல் ஆறுமாத கால பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.

இந்த பயிற்சிகள் பூர்த்தியானதன் பின்னர் அவர்களை பாடசாலைகளுக்கும் அரச நிறுவனங்களில் பணியாற்றுவர்களுக்கும் மொழி கற்பிப்பதற்காக இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.