இன்றைய திகதியில் எம்மில் பலரும் சளித் தொல்லையால் பாதிக்கப்படுகிறார்கள். அதிலும் மூக்கின் வழியாக சுவாசிப்பதற்கு சிரமப்படும் போது தான் சளியின் தொல்லையை கடினமாக உணர்வார்கள். மூக்கு பகுதியில் ஏதேனும் அசௌகரியங்கள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவர்களிடம் காண்பித்து, அதனை குணப்படுத்திக் கொள்ளவேண்டும். 

குறிப்பாக பருவ காலங்கள் இயற்கையாக மாற்றம் பெறும் போது முதலில் பாதிக்கப்படுவது மூக்கு தான். இந்நிலையில் எம்மில் சிலருக்கு மூக்கு பகுதியில் புற்றுநோய் ஏற்பட்டால். அதற்காக கவலையடையாமல் இதற்காக அறிமுகமாகியிருக்கும் நவீன சிகிச்சைகளை மேற்கொண்டு உங்களது வாழ்க்கையை ஆரோக்கியமாக வாழலாம். 

சளியின் காரணமாகவும், அல்லது பதினைந்திற்கும் மேற்பட்ட காரணங்களாலும் மூக்கு பகுதி பாதிக்கப்படலாம். இங்கு ஏற்பட்ட பாதிப்பிற்கு உரிய காலத்தில் சிகிச்சைப் பெறவில்லையென்றால்... நாளடைவில் மூக்கு பகுதியிலும் புற்றுநோய் வரக்கூடும். புற்றுநோய் ஏற்பட்டால் சத்திர சிகிச்சை, ரேடியேசன் தெரபி, கீமோ தெரபி ,External =Beam Radiation Therapy, IMRT மற்றும் புரோட்டான் தெரபி போன்ற சிகிச்சைகளின் மூலம் இதனை குணப்படுத்த இயலும். 

இதில் சிலருக்கு கண் பகுதிக்கு அருகேயுள்ள மூக்கின் உள்பகுதியில் புற்றுநோயின் பாதிப்பு ஏற்பட்டிருக்கக்கூடும். அத்தகையவர்களுக்கு தற்போது புரோட்டான் தெரபி மூலம் சிகிச்சையளிக்கப்பட்டு அவர்களின் புற்றுநோய் குணப்படுத்தப்படுகிறது. இதன் போது ஏற்படும் பக்கவிளைவுகளின் அளவு தற்போது குறைக்கப்பட்டிருப்பதால் இத்தகைய சிகிச்சையை பலரும் மேற்கொள்கிறார்கள்.

டொக்டர் வேணுகோபால்

தொகுப்பு அனுஷா.