"தேசிய ஒற்றுமையை நிலைநாட்ட அடுத்த ஐந்து வருடத்துக்கும் மக்கள் ஆணைதர வேண்டும்"

Published By: Vishnu

10 Sep, 2019 | 05:00 PM
image

(நா.தினுஷா) 

நாட்டின் அடையாளத்தை பாதுகாத்துக்கொண்டு ஒற்றுமையை கட்டியெழுப்புவதற்கு ஐந்து  வருடங்கள் போதாது. அடுத்து வரும் ஐந்து வருடங்களிலும் அதற்காக செய்ற்பட்டால் மாத்திரமே தேசிய ஒற்றுமையை முழுமையாக கட்டியெழுப்ப முடியும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். 

மொழி பயிற்றுவிப்பாளர்களை திசைமுகப்படுத்துவதற்கான  தேசிய நிகழ்ச்சித்திட்டம் இன்று செவ்வாய்க்கிழமை பிரதமர் விக்கிரமசிங்க  தலைமையில் அலரிமாளிகையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

வரலாற்றில் எமது தலைவர்கள் சகலரும் இன , மத வேறுபாடின்றி ஒருவருக்கு ஒருவர் ஒத்துழைப்புடனேயே செயற்பட்டனர். அதனூடாக  அவர்களின்  இலக்குகளை வெற்றிகொண்டார்கள். இதேவேளை நாம் முப்பது வருட யுத்தத்தை காலத்தை சந்தித்துள்ளோம். அதன்  தொடர்ச்சியாக  நாட்டை அபிவிருத்தி  செய்யும் பணிகளே தற்போது இடம்பெற்று வருகின்றன. பாதைகளை நிர்மாணம் , கட்டிட நிர்மாணம் போன்ற பௌதீக அபிவிருத்திகள் கண்ணுக்கு புலப்படக் கூடியவை. அவ்வாறான அபிவிருத்தி பணிகள்  பிரமாண்டமாக  பார்க்கப்படக் கூடியவை.

இவற்றுக்கு அப்பால்  நாட்டின் அடையாளத்தை பாதுகாப்பதிலேயே எங்களின் முன்னேற்றம் தங்கியுள்ளது. 

நாட்டின் அடையாளத்தை பாதுகாத்துக்கொண்டு ஒற்றுமையை கட்டியெழுப்புவதற்கு ஐந்து  வருடங்கள் போதாது. அடுத்து வரும் ஐந்து வருடங்களிலும் அதற்காக செய்ற்பட்டால் மாத்திரமே தேசிய ஒற்றுமையை முழுமையாக கட்டியெழுப்ப முடியும.; 

2015 ஆம் ஆண்டு அரசியல் தீர்வு பெற்றுக்கொடுப்பதாக வாக்குறுதி வழங்கியிருந்தோம்.  அது தொடர்பில் பல்வேறு  விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன. 

ஆகவே அந்த விடயத்தில் தீர்வை பெற்றுக்கொள்ள கூடியதாக இருக்கும்.  நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை நாமே உருவாக்கினோம். அதேபோன்று  தற்போது அந்த ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கும் எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35