(இராஜதுரை ஹஷான்)

பொதுஜன பெரமுனவின் மொட்டு சின்னத்தில் மாற்றத்தினை  ஏற்படுத்த எக்காரணிகளுக்காகவும் இடமளிக்க முடியாது. இவ்விடயத்தில் எவ்வித விட்டுக் கொடுப்பும் கிடையாது. சின்னத்தில் மாற்றமில்லையேல் தனித்து போட்டியிட முடியும் என்று  சுதந்திர கட்சியினர் குறிப்பிடுவதால் எதிரணிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என  பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பொதுஜன பெரமுனவின் மொட்டு சின்னத்தை நாட்டு மக்கள் முழுமையாக  ஏற்றுக் கொண்டுள்ளார்கள். இடம் பெற்று முடிந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலின் போது எந்நிலையிலும்   இச்சின்னத்தில் மாற்றத்தை ஏற்படுத்தமாட்டோம் என கட்சியின் ஸ்தாபகர்  பஷில் ராஜபக்ஷ , கட்சியின் தவிசாளர் ஜி.எல். பீறிஸ் ஆகியோர் உறுதியாக குறிப்பிட்டுள்ளார்கள். 

இத்தீர்மானத்தில் தற்போதும் எவ்வித மாற்றங்களும் கிடையாது என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.