தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தி.மு.க. "போதுமான அளவுக்கு வெற்றி பெறும்" என்று கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இன்று, தமிழக சட்டமன்றத்துக்கு உறுப்பினர்களை தேர்ந்தெடுபதற்கான தேர்தல் நடைபெறுகிறது.

இதன்போது, தி.மு.க. தலைவர் கருணாநிதி கோபாலபுரத்தில் உள்ள சாரதா பாடசாலையில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் வாக்களித்தார். வாக்களித்த பின்னர் கருணாநிதி செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

தேர்தலில் திமுகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. தேர்தல் ஆணையம் ஒரு சில இடங்களில் சிறப்பாக செயற்பட்டுள்ளது, ஆனால் லொறிகள் மூலம் பண பரிமாற்ற சம்பவங்களும் நடந்துள்ளது. தேர்தல் ஆணையம் அவர்களுக்கு எதிராக நடவடிக்கையை தொடங்குமா என்று மக்கள் மனதில் கேள்வி உள்ளது என்றார்.