பாக்கிஸ்தானிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டால் ஐபிஎல் போட்டிகளில் இடமளிக்கமாட்டோம் என இந்தியா இலங்கை வீரர்களை அச்சுறுத்தியது என பாக்கிஸ்தானின் விஞ்ஞான மற்றும் தகவல்தொழில்நுட்ப அமைச்சர் பாவட் சௌத்திரி  தெரிவித்துள்ளார்.

தனது டுவிட்டர் செய்தியில் இலங்கை பாக்கிஸ்தானிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதை கைவிடவேண்டும் அல்லது ஐபிஎல் போட்டிகளில் இலங்கை வீரர்களிற்கு இடமளிக்கமாட்டோம் என இந்தியா மிரட்டியது என கிரிக்கெட் விவகாரங்கள் குறித்து நன்கு அறிந்த வர்ணனையாளர் ஒருவர் எனக்கு தெரிவித்துள்ளார் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இது மிகவும் மோசமான தந்திரோபாயம்,விளையாட்டு முதல் விண்வெளி வரை மூர்க்கத்தனமாக சண்டையிடும் குணத்தை நாங்கள் கண்டிக்கவேண்டும் எனவும் பாக்கிஸ்தான் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்திய விளையாட்டுதுறை அதிகாரிகளின் மிகவும் மோசமான நடவடிக்கையிது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் ஒரு நாள் அணியின் தலைவர் திமுத் கருணாரட்ண ரி20 அணியின் தலைவர் லசித் மலிங்க உட்பட முக்கிய வீரர்கள் பாதுகாப்பு காரணங்களிற்காக பாக்கிஸ்தான் செல்வதற்கு மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

திமுத் கருணாரட்ன தினேஸ் சந்திமல் அஞ்சலோ மத்தியுஸ் சுரங்க லக்மால் நிரோசன் டிக்வெல குஜால் ஜனித் பெரோ தனஞ்செய சில்வா திசார பெரேரா லசித்மலிங்க அகில தனஞ்செய ஆகிய வீரர்களே பாதுகாப்பு காரணங்களிற்காக பாக்கிஸ்தான் செல்ல மறுத்துள்ளனர் என இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை தெரிவித்துள்ளது